Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவருடன் சேர்த்து வைப்பதற்கு …. லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் …. அதிரடி பணியிடை நீக்கம் ….!!!

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிடம்  95 ஆயிரம் ரூபாயை  லஞ்சமாக கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . 

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த உமா(20) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற  தன் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு என்பவர் கணவரிடம் சேர்த்து வைப்பதற்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் இவ்வளவு தொகையை என்னால் தர முடியாது என்று உமா தெரிவித்துள்ளார். இதனால் ரூபாய் 95 ஆயிரம் பணம் கொடுப்பதற்கு உமா சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் புகார் அளித்த உமா தரப்பிலிருந்து பணம் வராததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது .இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்ட உமா மீண்டும் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உமாவிடம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ரூபாய் 95 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார். இதனை உமா தனது கையிலிருந்த செல்போனில் பதிவு செய்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் லஞ்சம் கேட்ட சப் -இன்ஸ்பெக்டர் வேம்புவை  பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

Categories

Tech |