பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த 2014ஆம் ஆண்டு பிரியங்காவிற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் துணை இயக்குனர்களில் ஒருவரான பிரவின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரியங்கா அவரது கணவர் பிரவினுடனிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .