Categories
ஆன்மிகம் இந்து

அடடே..! கனவில் கடவுள் வந்தால்… இவ்வாறு அர்த்தம் உண்டோ..!!

உங்கள் கனவில் எந்த தெய்வம் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

ஆன்மீக கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம் நீங்கள் உங்களை தாண்டியும் மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்க போகிறது என்று அர்த்தம். கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

கனவில் கோவிலை கண்டால் இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்ற அர்த்தம். கோவிலுக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால் சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு கஷ்டப்படுவார்கள் என்று அர்த்தம்.

ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவை சாத்தப் பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்துவரும் தொழிலில் பிரச்சினை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போன்று கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல் கனவு வந்தால் நல்ல வளர்ச்சி அடைய போகிறார்கள் என்ற அர்த்தம். முருகக்கடவுளை கனவில் கண்டால் பிரச்சனைகள் விலகும் எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும் என்ற அர்த்தம். ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள். கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை பெற்றுக் கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனக் கவலைகள் ஏற்படும் என்று பொருள். கோவில் தெப்பக்குளத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம்.

கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது. இது விரைவில் நன்மை பெற போவதின் அர்த்தமாகும். விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வச்செழிப்பு ஏற்படும். விஷ்ணு கருடன் மீது வருவது போல் கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும் மனதில் அமைதி ஏற்படும்.

இயேசுவை சிலுவையில் அறைவது போல் கனவு வந்தால் துன்பம் வரும். ஆனால் அது விரைவில் மாறிவிடும். காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும். கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.

கோவில் மணி அடிப்பது போல் கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும். கோவில்மணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். அய்யனார் தெய்வத்தை கனவில்கண்டால் சகல சவுகரியமும் கிட்டும். நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.

விநாயகரே கனவில் கண்டால் உங்களின் எல்லா பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்று பொருள். யானை உங்களை துரத்துவது போன்ற கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்திக்கடன் வைத்து உள்ளீர்கள் என்று அர்த்தம். யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு வந்தால் உங்களின் அனைத்து காரியமும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.

முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லாவிதமான தோஷமும் நீங்கி விட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாம் நன்மையாகவே நடக்கும். அம்பாள் அம்மனை கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்று அர்த்தம். திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கும் என்று அர்த்தம்.

Categories

Tech |