Categories
ஆன்மிகம் இந்து

கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா..!!

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும். எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக அனைவருக்குமே  கனவுகள் வரும். கனவுகள் நல்லதாக இருக்கும் சில பேருக்கு, கெட்ட கனவாக இருக்கும் சிலருக்கு. கனவு பலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு, கனவு பலிக்கக்கூடாது என்ற ஆசை இருக்கும். இந்த மாதிரி கனவுகள் வந்தால், இதற்கு என்ன பலன் என்று பார்த்தால், உங்களுக்கு எந்த மாதிரி கனவு வந்தது கேட்போம், நல்ல கனவா இருந்தது என்று சொன்னால் நிச்சயமா நடக்கும், தைரியமா இருங்க சந்தோசமா இருங்க அப்படின்னு கூறுவோம்.

ஒரே வார்த்தை நாம் என்னதான் தலைகீழா நின்னாலும் நடக்கிறதுதான் நடக்கும். எண்ணெய்யை தேய்ச்சிட்டு உருண்டு புரண்டாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டும். அந்த மாதிரி தர்ம புண்ணியங்களை பொறுத்தே மனிதனுடைய வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் அமையும். இருப்பினும் கனவு சாஸ்திரம் ஒன்று இருக்கிறது. அதில்  சில விதமான கனவுகளுக்கு சில வகையான பலன்கள் உண்டு.

அதாவது பொதுவாக நல்ல கனவு கண்டீர்கள் என்றால் சந்தோசமா இருங்க, கெட்ட கனவாக இருந்து விட்டது என்றால் காலையில் எழுந்ததும் அந்த கனவை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், அருகில் இருக்கக் கூடிய பசு மாட்டுக்கு கொஞ்சம் புல்லோ, பழமோ அல்லது கீரையோ கொடுத்து அதன் பின்பு அந்த பசு மாட்டிடம் உங்கள் கனவைப் பற்றி சொல்லி இந்த கனவு பலிக்க கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் அந்த கனவு நிச்சயமாக பலிக்காது.

கனவு கண்ட நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும்.

மாலை 6லிருந்து 8.24 நிமிடங்களுக்குள் காணக்கூடிய கனவு ஒரு வருடத்தில் பலிக்கும்.

இரவு 8.24 நிமிடங்களில் இருந்து 10.48 நிமிடங்களுக்குள் காணக்கூடிய கனவு 3 மாதங்களில் பலிக்கும்.

இரவு 10.48 லிருந்து 1.12 நிமிடங்களுக்குள் காணக்கூடிய கனவு ஒரு மாதத்தில் பலிக்கும்.

இரவு 12 மணி 12 நிமிடங்களிலிருந்து அதிகாலை 3 மணி 36 நிமிடங்களுக்குள் கண்ட கனவு 10 தினங்களுக்குள் பலிக்கும்.

விடியக் காலை 3மணி 36 நிமிடங்களிலிருந்து 6 மணிக்குள் காணக்கூடிய கனவு உடனடியாக பலிக்கும்.

என்று கனவு சாஸ்திரம், பஞ்சாங்க சாஸ்திரம் எஅனைத்தும் கூறுகிறது. அதே மாதிரி பகல் கனவு கண்டால் பலிக்குமா என்று கேட்பார்கள். கனவு சாஸ்திரம் ஆக இருக்கட்டும், பஞ்சாக சாஸ்திரமாக இருக்கட்டும் சொல்வது என்னவென்றால் பகலில் காண கூடிய கனவுகள் நிச்சயமாக பலிக்காது.

நல்ல பலன்களை தரக்கூடிய கனவுகள்:

வானவில்லை காண்பது

விவசாய ம் செய்வதுபோல் காண்பது

செழிப்பான தோட்டங்கள்

விவசாயத்தை உழுவது

இது மாதிரி  நீங்கள் கண்டீர்கள் என்றால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இது இல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. மறுபடியும் சொல்வது ஒன்றுதான் நல்ல கனவு கண்டால் சந்தோசமா இருங்க, கெட்ட கனவு கண்டால் நன்மையோ தீமையோ ஆதி சிவன் கையில், நம் கையில் ஒன்றுமே இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று சந்தோஷமாக இருங்கள்.

Categories

Tech |