Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காச்சி குடா  விரைவு ரயில் மற்றும் திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில் ஆகியவை திருத்தணி ரயில் நிலைய நடைமேடையை வந்தடைந்துள்ளது.

அதில் காவல்துறையினர் ஏரி சோதனை செய்த போது காச்சி குடா ரயிலில் பாலகிருஷ்ணன் என்பவர் வைத்திருந்த பையில் 16 கிலோ கஞ்சாவும் மற்றும் கண்ணன் என்பவர் வைத்திருந்த பையில் 14 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதைப்போல் திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் இருக்கும் பொன்பாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பாலகிருஷ்ணன் என்பவர் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |