கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டிருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவராயன் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் சுரேந்தர், விக்னேஷ், ரகுராம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த கஞ்ச, இரண்டு செல்போன்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.