Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஏமப்பேர் புறவழிச்சாலை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் இரண்டு பேர் கஞ்சா வாங்கி உள்ளனர்.

இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமரேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கோபாலகிருஷ்ணன் பாபு என்பவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கல்வராயன்மலைக்கு சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து பாபுக்கு போன் செய்துள்ளார்.

பின்னர் சிறுவனும், குமரேசனும் கோபாலகிருஷ்ணனிடமிருந்து கஞ்சாவை வாங்க வந்த போது காவல்துறையினரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |