2 வாலிபர்கள் இணைந்து கஞ்சா செடிகளை வீட்டில் வைத்து வளர்த்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் இரண்டு வாலிபர்கள் தங்களின் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேர் வீடுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் தங்கள் வீடுகளில் புளிச்ச கீரை வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்துள்ளனர்.