Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுவனா செஞ்சான்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெருமூளை ஈரோட்டில் நின்று கொண்டிருந்த சிறுவன் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அந்த சிறுவன் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |