முட்புதரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் கனகசபாபதி தெருவில் வசிக்கும் குமரேசன் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.