சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஒடி உள்ளார்.
இதை அறிந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குப்பன் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.