கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் திருவந்திபுரம் பாலக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.