கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகாமையில் இருக்கும் மணகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் சிவமணி என்பவரை கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.