Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், மின் நகர், உள்பட 5 பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ரெயிலடியில் கஞ்சா விற்பனை செய்த ஈஸ்வரி, ஸ்ரீதர், தமிழ்ச்செல்வன் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்த 1 3/4 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |