கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு நகர் பகுதியில் ஜான் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை கூட்டுரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஜான் பாலை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.