கடைவீதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லடை ஊராட்சி கீழவெளியூர் கடைவீதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.