கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அணைக்கட்டு ரோட்டில் பலமுறை அவ்வழியாக சுற்றித்திரிந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் கீழ் படவேட்டம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்துள்ளனர்.