கஞ்சாவை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேட்டு தெரு அருகாமையில் முட்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் பாலாஜி என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.