கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 வாலிபர்ககளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சாவை ஒலிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் 2.0 ஒரு மாதம் நடத்த வேண்டும் என தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கும்பலுக்கு பெரும் பீதி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பக்தவச்சலம் நகர் அருகாமையில் ஏரிக்கரை பகுதி போன்ற இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த யோகேஷ், ஹரிகிருஷ்ணன், கமல், ரவி ஜெயபால் மற்றும் யஷ்வந்த், காளி, தெகி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.