கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கெடிலம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகாமையிலிருக்கும் ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியன், சஞ்சீவ் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.