கையில் கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் குற்றப்பிரிவு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் காவல்துறையினர் ரயில்வே ஜங்சன் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் சின்னசேலம் பகுதியில் வசிக்கின்ற ராஜா என்பவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்திருக்கிறார்.
இதனை அடுத்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து விருதாச்சலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்துள்ளனர்.