இப்படம் வருகின்ற ஏப்ரல் 19 தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முனி படத்தில் நடித்த வேதிகாவும், ஓவியாவும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழு அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.