சுவிட்சர்லாந்து நாட்டில் பனிப்பாறைகள் உருகி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 18 புதிய ஏரிகள் உருவானதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் காலநிலைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளினால் பனிப்பாறைகள் உருகுகின்றன. அதன் பின் அவை ஏரிகளாக உருமாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 1850 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் வரை ஆன காலங்களில் சுமார் 1200 பனிப்பாறை ஏரிகள் உருவானதாக கூறப்படுகின்றன. ஆனால் அதில் வெறும் ஆயிரம் ஏரிகள் தான் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பல ஏரிகள் மறைந்து போனாலும் புதிதாக ஏரிகள் நூற்றுக்கணக்காக உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் காலநிலை வேறுபாட்டினால் 1௦௦௦க்கும் மேற்பட்ட ஏரிகள் காணப்படுவதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து 2006 முதல் 2010 வரை அதாவது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 18 புதிய ஏரிகள் உருவாகியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.