டிசம்பர் மாதத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா விற்கான டெஸ்ட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பின் காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 8ம் தேதி இங்கிலாந்தில்- போஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார். அதில் “விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி திட்டமிட்டபடி வருகின்ற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. அந்த சமயம் ஆஸ்திரேலியாவில் கொரோனோ தொற்று பாதிப்பு குறையும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
நீண்ட தூரம் பயணித்து இரண்டு வாரம் ஹோட்டல் அறைகளில் வீரர்கள் தனிமைப்படுத்துதல் இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொடர்பு இருக்கப்போவதில்லை இது கடினமான தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவின் அணி வலியாக இருந்தாலும் இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று மட்டுமல்ல இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என விராட்கோலி இடம் கூறியிருக்கிறோம்” என்றார்.