நம் உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு புதுமையான மருத்துவ ஆய்வு முறைகள் உள்ளது. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் வித்தியாசமாக ரஷ்யாவைச் சேர்ந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் ஒருவர் தன் கண்களாலேயே மனித உடலில் உள்ள பிரச்சினைகளை கண்டறியும் திறன்கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
அதாவது இவர் தனது சிறுவயதில் தனது தாயின் உடல் உள்ளுறுப்புகளை கண்களால்ஊடு சக்தி மூலம் பார்க்கக தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரின் புகழ் உலகமெங்கும் பரவியது. இந்த நிலையில் இவர் கூறுவது பொய்யா உண்மையா என மருத்துவ நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த பெண் டாக்டர் ஒருவரின் வயிற்றில் எந்த பகுதியில் அல்சர் உள்ளது என்றும் மற்றொரு பெண்ணின் உடலில் இருப்பது புற்றுநோய் கட்டி அல்ல என்று நிகோலெயவ்னா பதிலை கேட்ட மருத்துவர்கள் வியந்து போய் நின்றனர்.