Categories
இந்திய சினிமா தமிழ் சினிமா

ஒரு பேருந்தின் விலை எவ்வளவு தெரியுமா? இது நியாயமல்ல-கங்கனா சரமாரி கேள்வி

மும்பை: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனநாயகத்தில் வன்முறை பொருத்தமானதல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தின் விலை தெரியுமா என்றும் வன்முறையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நடிகை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். மும்பையில் நடந்த திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்துக் கொண்ட கங்கனா இதுகுறித்து கூறும்போது, ”எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்து இங்கு வன்முறையில் ஈடுபட உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? எங்கள் நாட்டின் பேருந்து மற்றும் ரயிலை தீயிட்டு கொளுத்துகிறீர்கள். ஒரு பேருந்தின் விலை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம்.
எங்கள் நாட்டிலிலுள்ள நிலையை பார்த்தீர்கள். மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீங்கள் வன்முறையில் ஈடுபடுவது நியாயமல்ல.” என்றார்.

மேலும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து குறிப்பிட்ட கங்கனா, நரேந்திர மோடி உழைப்பால் உயர்ந்தவர் என்று புகழாரம் சூட்டினார். இதுகுறித்து அவர், “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. எங்கள் தலைவர் மிகச்சிறிய இடத்திலிருந்து உழைப்பால் உயர்ந்து வந்தவர்.

பல சிரமங்களை கடந்து கடின உழைப்பால் தன்னை உருவாக்கியுள்ளார்.
நாங்கள் அவரின் தகுதியை உணர்ந்துள்ளோம். ஜனநாயகத்தில் நடக்கவே நடக்காது என்று கூறியவற்றை நடக்கும், நடத்திக் காட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.” என்றார்

Categories

Tech |