நடிகை கங்கனா ரனாவதின் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், உங்கள் சக்தியை மீறி எதுவும் நடக்காது. நீங்கள் பயந்தால் அது உங்களை பயன்படுத்தும். கோவிட்டை ஒழிக்க வாரங்கள். அது சாதாரண புழு போன்றது ஆகும். மேலும் அது நமக்கு மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என பதிவிட்டிருந்தார்.
தற்போது உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸை நடிகை கங்கனா ரனாவத் புழு போன்றது என ஒப்பிட்டு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆகையால் இன்ஸ்டாகிராம் நிறுவனம் நடிகை கங்கனா ரனாவத் இந்த பதிவை நீக்கியுள்ளது.