இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய அவர், “கிரிக்கெட் விளையாட்டில் கவர்ச்சிகரமான விஷயங்கள் ஏதும் இல்லை. ஆங்கிலேயர்கள்தான் இந்த விளையாட்டை தூக்கிப்பிடித்து புகழ்பாடினர். இதன் விளைவாக தற்போது சிறப்புத் தகுதியை பெற்ற சின்னமாகத் திகழ்கிறது.பொருளதார ரீதியில் உயர்ந்தவர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது.
ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி மகாபாரதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மன்னர்கள் பலர் இந்த விளையாட்டை விளையாடியுள்ளனர். எனவே கபடி கவர்ச்சிகரமான விளையாட்டாக மட்டுமில்லாமல் பிரபலமான விளையாட்டாகவும் உள்ளது. கபடி விளையாடுவதற்கு இரு அணிகள், களம் தவிர வேறு எதுவும் தேவையில்லை” என்றார்.
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியிருக்கும் பங்கா திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தேசிய அளவில் சாதித்த கபடி வீராங்கனையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் படம் உருவாகியுள்ளது.