Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு…. “இதற்கு பயந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்” – கங்கனா ரனாவத்


நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

“தாம் தூம்” திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தற்சமயம் வாழ்கை கதையான “தலைவி”  படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்சமயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம்  என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்” இரவு 11:30 மணிக்கு என் அறையில் நான் இருந்தபோது அருகில் இரண்டு முறை துப்பாக்கி சத்தம் கேட்டது. இரண்டு குண்டுகள் 8 வினாடி இடைவெளிகளில் வெடித்தன.

பின்னாலிருந்து யாரோ வீட்டின் காம்பவுண்ட் சுவரில் சுட்டுள்ளனர். வீட்டின் பின்னால் இருக்கும் காட்டுக்குள் தப்பி சென்றிருக்கலாம். சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் மகன் குறித்து நான் கருத்து தெரிவித்ததற்கு இந்த மிரட்டல் விடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். மும்பையிலிருந்து நான் மணாலிக்கு வந்துள்ளதால் இந்த வீட்டை குறி வைத்து சுட்டுள்ளனர். இதற்கு நானே சாட்சி, சத்தம் கேட்டவுடன் பாதுகாவலர்களை தேடியபோது எவரும் இல்லை. உள்ளூரில் எவருக்காவது பணம் கொடுத்து இப்படி மிரட்டி இருக்கலாம். சுஷாந்த் சிங்கையும் இப்படிதான் அச்சுறுத்தி இருக்க வேண்டும். இதற்கு பயந்து பின்வாங்காமல் நான் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன்” என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கங்கனா வீட்டில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |