Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கங்கனா..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உருவப்படத்திற்கு கங்கனா மலர்தூரி மரியாதை செய்யும் புகைப்படத்தை சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

View image on Twitter

பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |