மரியாதையை சம்பாதிக்க வேண்டுமே தவிர உத்தரவிடக் கூடாது என்று நடிகை டாப்ஸி கங்கனாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இளம் நடிகர்கள் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நடிகை கங்கனா ரணாவத் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வாரிசு அரசியலை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் தாக்கி பேசியுள்ளார். மேலும் டாப்சி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் விமர்சித்திருந்தார். சமூக வலைதள பக்கத்தில்” டாப்சி வாழ்நாளில் தனியாக நடித்த ஒரு சோலோ படம் கூட வெற்றி பெற்றதில்லை” என கங்கணா குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்களில் ஒருவர் இதனை பகிர்ந்து டாப்சியிடம் விளக்கம் கேட்டார். ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த டாப்சி கூறுகையில்: சோலோ படம் எதுவும் கிடையாது, எந்த ஒரு நடிகரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. திரைப்படம் என்பது அனைத்து துறையும் சேர்ந்த ஒரு கூட்டு முயற்சி. யாருடைய ஆதரவும் இன்றி ஒரு முக்கிய கதாபாத்திரம் மட்டும் படத்தில் நடிக்க முடியாது. மரியாதை என்பதை நாமே சம்பாதிக்க வேண்டும் மற்றவருக்கு உத்தரவைப் போட்டு மரியாதை வாங்கக்கூடாது. என குறிப்பிட்டுள்ளார் கடந்த சில தினங்களாகவே டாப்சி மற்றும் கங்கணா இடையே கருத்து மோதல்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது.