Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு… பேஸ்புக் நிறுவனம் பதிலடி…!!!

எப்போதும் பாகுபாடு இல்லாமல் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள், சில நாட்களாக தொடர்ந்து பேஸ்புக் தளத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியுள்ளது. அதனை குறித்து அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்தச் செய்தியைச் சுட்டிக் காட்டும் வகையில் பேஸ்புக் தளம் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், ” எப்போதுமே பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். எந்த வகையிலும் பேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்க மாட்டோம்” என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி தங்களது கொள்கையில் ஒரு சார்புடன் பேஸ்புக் நிறுவனம் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Categories

Tech |