காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சியினர் கேஸ், சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பார்வையாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் காட்டூர் வெங்கடாசலம், நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் தியாகராஜன், வட்டார தலைவர்கள் கணேசன், புண்ணியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜானகி, சதாசிவம், வேலுசாமி, சாகுல்அமீது, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.