கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக வடசென்னை மக்களவை தொகுதி கோபிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கண்டவனும் நுழைய கோயில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த கருத்திற்கு எதிராக தர்மபுரி எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட கோபிகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கனிமொழி குறித்து ட்வீட் செய்த கோபி கிருஷ்ணன் மீது திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோபி கிருஷ்ணன் சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை தனது ட்விட்டர் கணக்கிலிருந்து நீக்கியுள்ளார்.
Kindly take strict action against Twitter handle @VGopikrishnan4 Executive member TN BJP for demeaning women @chennaipolice_ @copmahesh1994 @Twitter @TwitterIndia #cybercrime https://t.co/lNJTOg4C5j
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 29, 2021