பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலை குழுவில் ஒரே ஒரு பெண்ணிற்கு தான் இடம் கிடைத்திருக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டி இருக்கிறார்.
மகளிரின் குறைந்தபட்ச திருமண வயது 18-ஆக இருந்தது. அதனை, தற்போது 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. எனவே இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள, அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது. அந்த நிலைக்குழுவில் 31 நபர்கள் உள்ளனர். இதில் 30 பேரும் ஆண் எம்பிக்கள் தான். ஒரே ஒரு பெண் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.
திமுக எம்பி கனிமொழி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, “நாடாளுமன்றத்தில் பெண் எம்பிகள் 110 பேர் உள்ளனர். ஆனால் மகளிரின் திருமண வயது குறித்த சட்ட மசோதா தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலை குழுவில் ஒரு பெண் தான் இடம்பெற்றிருக்கிறார். மகளிரின் திருமண வயதை ஆண்கள் தான் முடிவு செய்வார்களா? அதனை பெண்கள் வேடிக்கை தான் பார்க்க வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்.