Categories
அரசியல்

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கனிமொழி மீது புகார் ….அதிர்ச்சியில் திமுகவினர் !!…

தூத்துக்குடி வேட்ப்பாளர் கனிமொழி மக்களுக்கு 500 ருபாய் பணம் கொடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன 

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெறுகிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் ஆனது அளிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி அவர்கள் நேற்றைய தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து இன்றைய தினம் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு உள்ளார் தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி மீது அதிமுகவின் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி அவர்கள்  பணப்பட்டுவாடா செய்ததாகவும் அவரின் வேட்பு மனுவை நிராகரிக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் விசாரித்தார் ,விசாரணையில்  அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் எம்எல்ஏவுமான இன்பதுறை இவ்வாறு கூறினார்,

 தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரத்தின் போது 500 ரூபாய் பணம் வழங்கி வருவதாகவும் இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது எனவும் குற்றம் சாட்டினார் மேலும் திமுக கழக வேட்பாளர் திருமதி கனிமொழி அவர்கள் தன்னை வரவேற்று ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு கனிமொழியும் அவரோடு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்  பணத்தை வாரி வாரி வீசுகிற காட்சி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது இக்காட்சி இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது ஆகவே கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் .

 

Categories

Tech |