Categories
பல்சுவை

தொடர் தோல்விகள்…. கைகொடுத்த கணிதம்…. காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜம்….!!

பொதுவாகவே பலருக்கும் கணிதம் மீது அவ்வளவு நாட்டம் இருக்காது. அதனை தவிர அனைத்து படங்களிலும் சில பிள்ளைகள் சதம் அடிப்பார். ஆனால் கணிதம் என்று வந்துவிட்டால் சற்று பின்வாங்க தான் செய்வார்கள். மற்ற சிலருக்கோ கணிதம் தான் உயிர். எவ்வளவு பெரிய கணக்கு கொடுத்தாலும் நிமிடத்தில் முடித்து காண்பிப்பார்கள். காரணம் அதன் மேலுள்ள பற்றுதான். இந்நிலையில் 1887ல் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு பள்ளிக்கூடம் சொல்வதற்கு ஆர்வம் இல்லை. ஆனால் கணிதத்தை கற்றுக் கொள்வது என்றால் மிகவும் விருப்பம். அனைத்து படங்களின் தோல்வியை தழுவினாலும் கணிதத்தில் மட்டும் சதம் அடித்து விடுவாராம்.

இதனையடுத்து இவர் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்த போது நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இவர் மூன்று தடவையும் நுழைவு தேர்வில் தோல்வியடைந்ததால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. ஏனென்றால் அவருக்கு கணிதத்தை தவிர வேறு எதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால் கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து இவர் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து வேலை தேட ஆரம்பித்துள்ளார். ஆனால் அவர் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பதால் யாரும் அவருக்கு வேலை தர மறுத்து விட்டனர்.

குறிப்பாக கணிதத்தில் ஆர்வம் காட்டி சதம் எடுத்திருப்பதால் ஒரு அக்கவுண்டன்ட் ஆக வைத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் வேலை கொடுத்திருக்கிறார். அதன்பின் வாழ்க்கையில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் உள்ள கணித மேதைகளை சென்று பார்த்துள்ளார். ஆனார் இவர் அக்கவுண்டன்ட் ஆக இருப்பதினால் யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இலண்டனில் உள்ள கணிதப் பேராசிரியருக்கு இவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அதனைப் பார்த்த அந்த பேராசிரியர் அதிர்ச்சி அடைந்து கூறியதாவது “எப்படி ஒரு இளைஞரால் இப்படி யோசிக்க முடிகிறது.

அந்த இளைஞர் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவரை நான் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அந்த இளைஞர் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து இருக்கிறார். இவர் நூறு வருடத்திற்கு முன்பு எழுதி வைத்திருந்த கணித நுணுக்கங்களை தற்போது உள்ள விஞ்ஞானிகள் பார்த்து மிரளுகின்றனர். மேலும் இவர் எழுதிய கணித நுணுக்கங்களை வைத்தே BLACK HOLES எப்படி வேலை செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் கற்றுக் கொண்டனர். சாதாரண பள்ளிக்கூட தேர்வில் அடைந்தால் வாழ்க்கையிலும் தோல்விதான் என்று பலராலும் சொல்லப்பட்ட இவர்தான் இன்று கணித உலகத்தின் கடவுளாக இருக்கும் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

Categories

Tech |