அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு யூஜின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலைக்குச் சென்று வேலை பார்ப்பதோடு, சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து குமரி மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்நிலையில் யூஜின் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்ததால் இவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததால், அதனிடையே யூஜின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது பெற்றொர்கள் வீட்டில் வந்து பார்த்தபோது, தன் மகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யூஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.