கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் 3 கோடியை 45 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி அழகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதாவது பள்ளியின் உள்ளே ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், பள்ளியினுடைய வெளிப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும்,மேலும் சுற்றுப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும் என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று கட்டங்களாக சேத மதிப்பிடை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதற்கட்ட சேத மதிப்பு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாம் கட்ட சேத மதிப்பு அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த சேத மதிப்பீட்டில், அதாவது பள்ளியின் உடைய வாகனம் , போலீசார் உடைய வாகனம் என 90 லட்சம் வரை சேத மதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல கம்ப்யூட்டர் சம்பந்தமான விஷயத்தில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ஆக சேத மதிப்பீடு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று குடிநீர் சுத்திகரிப்பு, சோலார் சிஸ்டம், சிசிடிவி என பல்வேறு சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு, மொத்த மதிப்பு மூன்று கோடியே 45 லட்சத்தில் 83 ஆயிரத்து 72 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஒன்பதாவது மாதம் 27ஆம் தேதி மூன்றாவது கட்டாவது சேத மதிப்பீட்டை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.