கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலநத்தம் பகுதியில் பாளையங்கோட்டை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் திருவேங்கடநாதபுரம் பகுதியில் வசிக்கும் சண்முகசுந்தரம், ஜோசப் விஜய், கணேஷ் என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.