சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் வி.எம்.சத்திரம் பகுதியில் வசிக்கும் சக்தி முகேஷ், சுந்தர்ராஜ் என்பதும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .