சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன், மல்லிகா மற்றும் கண்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.