கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல்துறையினர் நீதிமன்றம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் எபிநேசர் என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் எபிநேசரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று பாளையங்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலஅஜிதேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.