கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுடர்மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுடர்மணியை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ஏர்வாடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கோதைசேரி பகுதியில் வசிக்கும் அருண்குமார், கண்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.