சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி விக்ரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது களக்காடு பகுதியில் வசிக்கும் சரண்யா, கோவில்குளம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் சம்சுதீன் மற்றும் ஆம்பூர் பகுதியில் வசிக்கும் கிஷோர் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த 2 3/4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.