சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊமத்தம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வன்னிமடை கிராமத்தை சேர்ந்த தங்கம் என்பதும் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தங்கத்தை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 2500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.