Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்கிணர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்கிணர் பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சென்னை வடபழனி பகுதியில் வசிக்கும் பாண்டியன் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |