Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

பீமநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்

திருச்சி மாவட்டத்திலுள்ள பீமநகர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாலகரை காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரிந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  மார்சிங்பேட்டை  என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்ததில் மின்னலாதேவி என்ற பெண் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மின்னலாதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |