Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய ரவுடி…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் அரியநாயகிபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன் என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் கணேசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கணேசனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |