கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வசவப்புரம் பகுதியில் காரில் வைத்து கீழபுத்தநேரி பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அரவிந்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.